இம்முறை க.பொ.த. உயர் தர பரீட்சைக்குத் தோற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க அவர்கள் அரசியல் விஞ்ஞானம், தொடர்பாடல் மற்றும் ஊடக கல்வி ஆகிய பாடங்களில் S சித்தி பெற்றுள்ளார். மேலும் கிறிஸ்தவ சமய பாடத்தில் சித்தியடைய தவறியுள்ளார்.
இந்த பெறுபேறினால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். தனது பிரதான எதிர்பார்ப்பு சட்டக்கல்லூரி நுழைவுக்குத் தேவையான உயர் தர ஆங்கில பரீட்சையில் திறமை சித்தியை (C) பெற வேண்டும் என்பதாகும். தனக்கு A கிடைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.
எனினும் சித்தியடைய தவறிய கிறிஸ்தவ சமய பாட பெறுபேற்றை மீள் பரிசீலிக்க விண்ணப்பிக்கப் போவதாகவும் ரஞ்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

