100 வருடங்களுக்கு பின்னர் புத்த பெருமானின் உருவச்சிலை தலதா மாளிகையிடம் ஒப்படைப்பு

Rihmy Hakeem
By -
0
நாட்டின் முக்கிய பௌத்த வழிபாட்டு தலத்தில் வைக்கப்பட்டிருந்த புத்த பெருமானின் சிலை ஒன்று 100 வருடங்களுக்கு பின்னர் இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு அந்த சிலையை எடுத்து சென்ற பிரிட்டிஷ் பிரஜையின் குடும்ப உறவினர்கள் முன்வந்துள்ளனர்.

19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் பணியாற்றிய காலப்பகுதியில் பிரிட்டனின் தொல்பொருளியலாளரான Harry Charles Purvis Bell என்பவரினால் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இருந்த புத்த பெருமானின் உருவ சிலை எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பிரிட்டனின் நிர்வாகத்துக்கு உட்பட்டிருந்த காலப்பகுதியில் Harry Charles Purvis Bell என்வரினால் எடுத்து செல்லப்பட்ட இந்த சிலை மீண்டும் ஸ்ரீ தலதா மாளிகைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் தொல் பொருளியலாளரின் பேரனும் அவரது மனைவியும் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அததெரண 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)