1000 மாணவர்களுக்கு கணனி டிப்ளோமா / HND கற்க வாய்ப்பு ; உ/த தோற்றிய அனைவருக்கும் பல்கலைக்கழக வாய்ப்பை வழங்குவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு

Rihmy Hakeem
By -
0
இந்த 2020 ஆம் ஆண்டில் 1,000 மாணவர்களுக்கு கணனி டிப்ளோமா அல்லது உயர்தர டிப்ளோமா பாடநெறியை தொடர்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஹோமாகம தியகமவில் அமைந்துள்ள தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அமைச்சர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அங்கு கலந்துறையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
வார இறுதி நாட்களில் இந்த டிப்ளோமா பாடநெறியை கற்பதற்கு ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படும் என்றும், இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய சகல மாணவர்களுக்கும், பல்கலைக்கழகத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)