1980 இல் இஸ்லாத்தை தழுவிய ஜேர்மனிய சிந்தனையாளர் Dr.முராத் காலமானார்

Rihmy Hakeem
By -
0


Dr. Murad Wilfried Hofmann
ஜேர்மனிய சிந்தனையாளர், இராஜதந்திரி, அரசியல்வாதி.
1931 இல் பிறந்தார். ஹார்போர்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்றார்.
அல்ஜீரியா மற்றும் மொரோக்கோவுக்கு ஜேர்மனிய தூதுவராக கடமையாற்றினார்.

1980இல் இஸ்லாத்தை தழுவினார். அதன் பின் இஸ்லாம் குறித்து பல நூல்களை எழுதினார். அவற்றுள் ஒரு ஜேர்மனிய முஸ்லிமின் நாட்குறிப்புகள் , இஸ்லாம் ஒரு மாற்றீடாக என்பன குறிப்பிடத்தக்கவை. அவை மேற்குலகில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தின.

கலாநிதி முராத் (90 வயது) நேற்றைய தினம் (13) காலமானார். அல்லாஹ் அவரது நற்செயல்களை பொருந்திக்கொள்வானாக. உயர்ந்த சுவனத்தை அவரது புகலிடமாக்குவானாக.

- ஷெய்க் பைரூஸ் மஹாத் -





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)