ரத்ன தேரரின் பிரேரணை தோல்வியில் முடிவடையும் ; ஆளும் தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைக்காது - மஸ்தான்

Rihmy Hakeem
By -
0
பாராளுமன்ற அதுரலியே ரத்ன தேரர் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை இரத்து செய்வதற்காக முன்வைத்துள்ள தனி நபர் பிரேரணைக்கு பாராளுமன்றில் ஆதரவு கிடைக்கப் போவதில்லை. அது தோல்வியிலேயே முடிவடையும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

மேலும், அரசாங்க தரப்பிலிருந்தும் அதற்கு ஆதரவு கிடைக்காது. இனவாத போக்குள்ளவர்கள் அனைத்து தரப்பிலும் இருக்கிறார்கள். சரத் பொன்சேகா கூட புலனாய்வு பிரிவின் முக்கிய பதவிக்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தகுயுள்ளவர்கள் எந்த சமூகத்தில் இருந்தாலும் நியமிக்கப்பட வேண்டும் என்று மேலும் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)