சந்தேகம் இருந்தால் முழு அளவில் விசாரணை நடத்துங்கள்.அதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க நான் தயார்.

Rihmy Hakeem
By -
0
”உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானின் சகோதரர் ரில்வானை கொழும்பு
வைத்தியசாலையில் நான் பார்க்க சென்றதாக வந்த செய்திகள் தவறானவை.

இதனால் எனக்கு இப்போது அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டுள்ளது.
அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சிகளால் இப்படியான செய்திகள் வெளியிடப்படுகின்றன.

அரசியல் ரீதியான காரணங்களுக்காக இப்படியான கதைகளை சோடித்து மக்களை ஏமாற்றும் முயற்சி இது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தொடர்புபடுத்தி இப்படியான செய்திகள் வெளிவந்தன.நான் எதனையும் இரகசியமாக செய்தவனல்ல.காத்தான்குடிக்கு நான் சென்றபோதும் முன்னர் இப்படியான செய்திகள் வெளிவந்தன.

தீவிரவாதி என்று தெரியாமல் நான் சந்தித்தவர்களை வைத்து இப்படியான செய்திகள் வருகின்றன.
செய்யாத குற்றத்திற்கு நான் குற்றவாளியாக தயாரில்லை.உயிர்த்து ஞாயிறு தின தாக்குதல் நடத்தியவர்கள் எமது மதத்தின் கொள்கை கோட்பாடுகளை ஏற்றவர்கள் அல்லர்.அதனை எமது மதமோ சமூகமோ அங்கீகரிக்கவும் மாட்டாது.
இப்படியான நிலையில் அபத்தமான குற்றச்சாட்டுக்களை ஏற்க நான் தயாரில்லை.

சந்தேகம்  இருந்தால் முழு அளவில் விசாரணை நடத்துங்கள்.அதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க நான் தயார்.அதேசமயம் அரசியல் காரணங்களுக்காக யாரின் நற்பெயரையும் கெடுக்காதீர்கள் ”
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம் பியுமான ரவூப் ஹக்கீம் இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.

சிவா ராமசாமி -

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)