கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட சீன பெண் குறித்து தீவிர பரிசோதனை

Rihmy Hakeem
By -
0
சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையில் கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதார மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
நோயாளருடன் தொடர்புபட்ட பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனைத்து நோயாளர்களுக்கும் ஏற்ற பாதுகாப்பான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
நோய் பரவுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சீனாவில் இருந்து வந்த 43 வயதாக சீன நாட்டு பெண்ணுக்கே இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)