நிட்டம்புவ நகரில் இராணுவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கான அடிக்கல் நடப்பட்டது

Rihmy Hakeem
By -
0
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் படி, நிட்டம்புவ நகரிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் இராணுவ வீரர்களுக்கான நினைவுச் சின்னம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நேற்றைய தினம் (30) நடப்பட்டது.

இந்நிகழ்வில் அத்தனகல்ல பிரதேச சபையின் தவிசாளர் பிரியந்த புஷ்ப குமர உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், பௌத்த, கிறிஸ்தவ இஸ்லாமிய மதகுருமார்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இதற்கான நிதி பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்தே சேகரிக்கப்பட்டுள்ளன.

தகவல் - அல்ஹாஜ் பிர்தவ்ஸ் JP 





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)