பகிடிவதை விவகாரம் ; மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Rihmy Hakeem
By -
0
பகிடிவதை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேரும் நாளை (14) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் மாணவர்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது, விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டதுடன் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்புப் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் கடந்த​ 7ஆம் திகதி மாலை பகிடிவதையை அடிப்படையாகக் கொண்டு மோதல் இடம்பெற்றிருந்தது.
கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, சம்பந்தப்பட்ட மாணவர்கள் கடந்த 10ஆம் திகதி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)