சமூக ஊடகங்கள் ஊடாக பரிமாற்றப்படும் விடயங்கள் தொடர்பில் விசேடமாக கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
பொது மக்களை தவறான வகையில் நடத்தும் சில கூற்றுக்களினால் பொது மக்கள் மத்தியில் தேவையற்ற விதத்தில் அச்சத்தை இவை ஏற்படுத்துவதாகவும் சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் ஏதேனும் பொது மக்கள் அறிந்துகொள்ள வேண்டுமாயின் சகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள விசேட இரு தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொண்டு அது தொடர்பாக கேட்டறிய முடியும்.
இந்த தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு:
சுகாதார மேம்பாட்டு பிரிவு : 071 0107107
அனர்த்த பிரிவு: 011 3071073 / 071 3071083
சுகாதார மேம்பாட்டு பிரிவு : 071 0107107
அனர்த்த பிரிவு: 011 3071073 / 071 3071083
(அரசாங்க தகவல் திணைக்களம்)

