அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்த ஈரான் அரசு ; உலக அரசியலில் புதிய திருப்பம்

Rihmy Hakeem
By -
0


அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக இது பார்க்கப்படுகிறது.
உலகிலேயே தீவிரவாதத்திற்கு எதிரான ஒரே சவுக்கிதார் நாங்கள்தான் என்பது போல அமெரிக்கா செயல்பட்டு வந்தது. அமெரிக்கா நினைத்தால் எந்த ஒரு போராளி குழுவையும் தீவிரவாத அமைப்பு என்று ன முத்திரை குத்த முடியும்.
யாரை வேண்டுமானாலும் தீவிரவாதி என்று கூறி, தடை செய்ய முடியும். உலகம் முழுக்க தீவிரவாத அமைப்புகளை அமெரிக்கா இப்படித்தான் கட்டுப்படுத்தி வருகிறது.

புதிய திருப்பம்

ஆனால் இப்போது புதிய திருப்பமாக அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஆம் நம்புங்கள் ஒரு நாட்டின் ராணுவத்தை, இன்னொரு நாடு தீவிரவாத அமைப்பு என்று அறிவிப்பது இதுதான் முதல்முறை. உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக இது பார்க்கப்படுகிறது.
ஈரான்

தீர்மானம்

இதற்காக ஈரான் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனை தீவிரவாத இயக்க தலைமையகமாக அறிவித்தது. அமெரிக்காவின் முப்படைகளும் தீவிரவாத இயக்கம்தான் என்று ஈரான் கூறியுள்ளது.

முப்படை எப்படி

இந்த முப்படைகளை தீவிரவாத இயக்கம் என்று அறிவித்து இருப்பதால், அதன் தலைவர் அதிபர் டிரம்ப் தீவிரவாதி என்று பொருள்படுவார். இந்த அறிவிப்பு அமெரிக்காவை உணர்வு ரீதியாக சீண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலடியாக ஈரானை அமெரிக்கா விரைவில் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

(One India)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)