அரசாங்கம் இணையத்தள தாக்குதலை தடுப்பதற்கான சட்ட வரைபு பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக இணையத்தள பாதுகாப்பு (Cyber security act) சட்டத்துக்கான நடவடிக்கைகளை பூர்த்தி செய்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு இந்த புதிய சட்டத்தின் மூலம் சமூக இணையத்தளங்களில் அவதூறான விடயங்கள் மற்றும் தவறான கருத்துக்கள் பதிவு செய்யப்படுவதை தடுப்பதற்கும் அவ்வாறு பதிவு செய்யும் விடயங்களை உடனடியாக நீக்கிவிடுவதற்கான பொறிமுறை ஒன்றையும் சட்ட ரீதியில் ஸ்தாபிப்பதே இதன் நோக்கமாகும்.
விசேடமாக சமயம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சமூக இணையத்தள செயற்பாடுகளை தடுப்பதே இதன் நோக்கமாகும். இந்த சட்ட கட்டமைப்பு தேசிய இணையத்தள பாதுகாப்பு மூலோபாயத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பிரிவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த சட்டத்தின் மூலம் குற்றச்செயல் குறித்த விடயங்கள், தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களை தடுப்பதே இதன் நோக்கமாகும்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமால் குணரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கை கணனி Sri Lanka Computer emergency Readiness Team என்ற பிரிவு Cyber security act என்ற சட்ட வரைபை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பான கூட்டம் ஒன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த பிரிவின் அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்றதுடன் தயாரிக்கப்பட்டுள்ள சட்டம் தொடர்பான ஆவணமும் கையளிக்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

