நெருக்கடியில் இலங்கை மாணவர்கள்

Rihmy Hakeem
By -
0
சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸால், வூஹான் நகரில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் உணவுக்கு பெரும் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் சேமித்து வைத்த உணவுகள் முடிவடைந்ததால், உணவு பெறுவதில் பெரும் சிரமங்களை  எதிர்நொக்கி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, இலங்கை அரசாங்கம் அவர்களுக்குத் தேவையான விற்றமீன் மாத்திரைகள், உணவுகள் என்பவற்றை துரிதமாக வழங்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக, வெளிவிவகார  மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை மாணவர்கள் அங்கு வழங்கப்படும் சமைத்த உணவுகளை உண்ண மறுக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tamil Mirror

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)