ரஞ்சனின் குரல் பதிவு விவகாரம் ; குற்றவாளிகளுக்கு தராதரம் பார்க்காமல் தண்டனை வழங்குமாறு ஐதேக வேண்டுகோள்

Rihmy Hakeem
By -
0
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளின் ஊடாக வெளிவரும் தகவல்கள் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது தண்டனை வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிறிகொத கட்சி தலைமையகத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயகக்கவின் குரல் பதிவுகள் தொடர்பில் யாராவது சட்டத்திற்கு மாறாக நடந்திருந்தால், நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்திருந்தால் தராதரம் பாராது தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வரையில் குரல் பதிவுகளை வெளியிட்டு பிரச்சினைகளை மறக்கடிக்க செய்ய வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

AdaDerana.lk 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)