( ஐ. ஏ. காதிர் கான் )
புத்தாண்டு (2020) பிறப்பின் முதல் நாளில் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் நிகழ்வும், மத்திய கொழும்பு மக்கள் சந்திப்பு நிகழ்வும், நேற்று (01) காலை கொழும்பு, மருதானை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மத்திய கொழும்பு காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள், அனைத்து சமய மதத்தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
( மினுவாங்கொடை நிருபர் )




