புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஜனவரியுடன் நிறைவு

Rihmy Hakeem
By -
0


( மினுவாங்கொடை நிருபர் )

   புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள், ஜனவரி மாத  இறுதியுடன் நிறைவு செய்யப்படும் என, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

   சில புதிய கட்சிகள் பதிவிற்காக விண்ணப்பித்துள்ளதாகவும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

   இதுவரை, 70 கட்சிகள்  விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

   இதேவேளை, சில கட்சிகள் தமது கணக்கறிக்கையைச் சமர்ப்பிக்காததன் காரணமாக, அந்தக் கட்சிகளின் பதிவை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும்  சுட்டிக்காட்டியுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)