"அம்பான அடி" விழும் என்று சொன்னாா்கள் ; தற்போது ஏதாவது அநீதிகள் நடந்துள்ளதா? - அலி சப்ரி

Rihmy Hakeem
By -
0
நம் முஸ்லிம்கள் தோ்தல் காலத்தில் சொன்னாங்க கோட்டாபாய ஜனாதிபதியாக வந்தால் இந்த நாட்டில் முஸ்லிம்கள் இனி இருக்க முடியாது "அம்பான அடி" விழும் என்றும் சொன்னாா்கள். தற்பொழுது   அவா் ஜனாதிபதியாக வந்த பிறகு ஏதாவது அநீதிகள்  உங்களுக்கு  நடந்துள்ளதா?

நாம்  வழமைபோன்று நிம்மதியாகத்தானே  இன்றும் வாழ்கின்றோம் என்று ஜனாதிபதி சட்டத்தரணியும் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் சட்ட ஆலோசகருமான அலி சப்ரி  நேற்று (24) மருதானை அல்சபா மண்டபத்தில் என்.எம். அமீன், மௌலவி தாசீம் அவா்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட   நவமணிப் பத்திரிகையின் ரமளான்  பரிசு மழை போட்டியில் வெற்றியீட்டியவா்களுக்கு பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவா் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

    அவா் மேலும் அங்கு உரையாற்றுகையில் -
 மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதியரசா்கள் தலைவராக  நிந்தவூரைச் சோ்ந்த  திலீப் நவாஸ் ஜனாதிபதியினாலும் நீதிச் சேவை ஆணைக்குழுவினாலும் நியமிக்கப்பட்டுள்ளாா்.  இனியும் நமக்குள் இனரீதியாக அரசியல் கட்சிகள் வேண்டாம். நாமும் இணைந்து செயல்படுவோம். நாமே கடந்த 30 வருடத்திற்குள் விலகிச் சென்று விட்டோம். முஸ்லிம் பாடசாலை, தமிழ் பாடசாலை, கிரிஸ்த்துவ பாடசாலை என பிரிந்தோம். நாம் அணியும் உடைகளையும் கருப்பு அபாயா என அணிகின்றோம்.

பள்ளிவாசலுக்குள் சுன்னத்து ஜமாஆத், தப்லிக் ஜமஆத் என பிரிந்து பள்ளிக்குள் சண்டைப்பிடித்து ஒவ்வொரு ஜமாஆத்துக்கும் தனித்தனி பள்ளி நிர்மாணித்துக் கொண்டோம். அந்த வகையில் சஹ்ரானும் தனியே பள்ளிவாசல் நிர்மாணித்துக் கொண்டு அவா் உயிா்த்த ஞாயிறு தினத்தில் குண்டுகளுடன் ஏனையவா்களுடன் மாய்த்துக்  கொண்டாா்.

 இதனால் அப்பாவி முஸ்லிம்கள் 2225 பேர் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டு  சிறையில் வாடுகின்றனா்.  இவா்களை மீண்டெடுப்பதற்காக நான் ஒரு செயலகத்தை அமைத்து சில முஸ்லிம் சட்டத்தரணிகளுடன் இணைந்து அதற்கு 3 மில்லியன் பணம் தேவைப்பட்டது.  ஒரு முஸ்லிம் முதலாளி 6 இலட்சம்  ஆரம்பிப்பதற்காக தந்தாா். அப்பணத்தை வைத்துக் கொண்டு அந்த  செயலகத்தை ஆரம்பித்தோம்.  இந்த அப்பாவிகளது சகல தஜ்தாவேஜூகளையும் சேகரித்து அவா்களை விடுவிப்பதில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். ஒரு சிலா் செய்யும் தவறுகளுக்கு ஏனையோரும் பாதிக்கப்பட்டனா்.  ஆகவே தாம்  நாம் மற்றவருக்கு நமது மதத்தினை கற்பிக்க முன்பு நாம் ஒன்றுபட்டு ஒரு கொடியின் கீழ் வரல் வேண்டும். சில முஸ்லிம் தலைவா்கள் காலத்துக்கு காலம்   தோ்தல்களில் மட்டும் அவா்களது சுயலாபத்திற்காக முஸ்லிம்களை பாவித்துவிட்டு  அந்த மக்களை நடு ஆற்றில் விட்டுவிடுகின்றாா்கள்.

 இந் நிலை மாறல் வேண்டும்.  முஸ்லிம்கள் தனி கட்சி, இருந்தால் தமிழா்களும் தனிகட்சி ஆரம்பிப்பாா்கள். அதே போன்று தான் பௌத்தா்களும் இனரீதியாக கட்சி ஆரம்பித்தாா்கள். இந்த நாட்டு முஸ்லிம்களின் சிறந்த கல்வி ஸ்தாபனம் பேருவளை ஜாமிஆ நளிமீயா அக் கல்வி நிறுவனத்தைக் கூடி பிழையான தகவல்களை ஞானசாரத் தேரரிடம் கூறி இருந்தாா்கள். அது சம்பந்தமாக  தொலைபேசி ஊடாக ஞானசார தேரரிடம் விளங்கப்படுத்தினேன்.  அவா்களே எம்மைப்பற்றி அச்சப்படுகின்றாா்கள். நமது கல்வி முறை, மாா்க்க பிரிவுகள், உடை உணவு கலாச்சாரங்கள்
 என அங்கு அலி சப்றி உரையாற்றினாா்.

(அஷ்ரப் ஏ சமத்)



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)