தென்கொரியா வாழ் தமிழ் பேசும் மக்களுக்கான குளிர் கால இஜ்திமா

Rihmy Hakeem
By -
0


தென்கொரிய வாழ் தமிழ் பேசும் மக்களின், குளிர்கால இஜ்திமா, கடந்த ஜனவரி 24ஆம் 25ஆம், திகதிகளில், இன்சியோன் நகரில் உள்ள மஸ்ஜித் உமர் அல் பாரூக் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

'அருளாளனின் அடியார்கள்' எனும் கருப்பொருளில் இடம்பெற்ற இவ்விஜ்திமாவில் இலங்கை, இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டு சகோதரர்கள் கலந்து கொண்டதோடு, கொழும்பைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அஹ்மத் யாஸிர் அவர்கள், விஷேட பேச்சாளராகக் கலந்து சிறப்பித்தார்.

கருப்பொருள் உரையுடன், சின்னச் சின்ன நன்மைகள் சகோதரத்துவ அமர்வு, உடற்பயிற்சி, விசேட துஆப் பிரார்த்தனை, அனுபவப் பகிர்வுக்கான அமர்வு என பல வித்தியாசமான நிகழ்வுகளைக் கொண்டமைந்தது சிறப்பம்சமாகும். மேற்படி நிகழ்வுகளில், அஷ்ஷெய்க் லுக்மான், ஆசிரியர் இஜாஸ், ஆசிரியர் அல்தாப் ஆகியோரும் வளவாளர்களாக  பங்கெடுத்துக் கொண்டனர்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)