ரணில், சஜித், கரு சந்திப்பு

Rihmy Hakeem
By -
0
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது.
கட்சி தலைமைத்துவவம் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்வதற்காக நேற்று (16) பிற்பகல் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
 
கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் தலைவர் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமானது இந்தக் கூட்டம் சுமார் 3 மணியோரம் இடம்பெற்றது.
எனினும், அந்தக் கூட்டத்தில் தலைமைத்துவம் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் எதிர்வரும் திங்கட்கிழமை சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamilmirror 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)