கஹட்டோவிட்ட கூட்டுறவு சங்க நிர்வாக சபைத் தேர்தல் ; நஜீம் JP தலைமையிலான ஐதேக அணி அமோக வெற்றி

Rihmy Hakeem
By -
0
இன்று (2020.01.19) நடைபெற்ற கஹடோவிட  கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் கஹடோவிட வட்டார அமைப்பாளரும்  பிரதேச சபை உறுப்பினருமான நஜீம் J.P.  தலைமையிலான அணியில் போட்டியிட்ட ஒன்பது வேட்பாளர்களும் அமோக வெற்றி பெற்றனர்.

ஒன்பது வேட்பாளர்களும் 82 க்கும் 89 க்கும் இடைப்பட்ட வாக்குகளை பெற்றுக் கொண்டனர். பொதுஜன முன்னணி சார்பான அணியினர் 15 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தனர். இத்தேர்தலில் நஜீம் ஜே.பி. M.S.M.ஹஸன் மற்றும் M.U.M.இத்ரீஸ் ஆகியோர் 89 வாக்குகளை பெற்று முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டனர்.

தகவல் - நாஸர் JP 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)