
JM Media College இன் விரிவுரையாளராக மற்றும் எமது பல நிகழ்வுகளின் வளவாளராக கலந்து கொண்ட இலங்கையின் மூத்த புகழ்பெற்ற தமிழ் அறிவிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த “காந்தக் குரலோன்” ARM ஜிப்ரி அவர்கள் வபாத்தானார்கள் என்ற செய்தி எம்மை கவலையடைய செய்கிறது.
“இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”
ஜனாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் சென்று காலை 8 வரை அங்கு வைத்து8 மணிக்கு ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்துச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஜனாஸா நல்லடக்கம் மாலை கல்முனையில் நடைபெறும்.
அவர்களைப் பிரிந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு இறைவன் பொறுமையை வழங்குவதுடன், அவர்களுக்கு இறைவன் மேலான சுவனத்தை வழங்கவும் பிறார்த்திக்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னித்து உயர்தரமான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் நுழையச் செய்வானாக.
*Raza Malhardeen*
_General manager_
_JM Media Production and College_
_General manager_
_JM Media Production and College_
