நாம் ரசித்துக் கேட்ட வெண்கலக் குரல் ஏ.ஆர்.எம் ஜிப்ரி - Shameela yoosuf ali

  Fayasa Fasil
By -
0
சொல்லுங்கள் வெல்லுங்கள்!
மாணவப் பருவத்தில் நாம் ரசித்துக் கேட்ட வெண்கலக் குரல் ஏ.ஆர்.எம் ஜிப்ரி.
ஒரு நாள் பாடசாலையிலிருந்து களைத்து வீடு வருகிறேன். உம்மா என்னை அழைத்து தொலைபேசி ரிஸீவரைக் காதில் வைக்கிறார். ஏ.ஆர்.எம் ஜிப்ரியின் குரல் மறுமுனையில்.
நேரடி நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். பெயர்,படிக்கும் வகுப்பு கேட்டுவிட்டு விருப்பப் பாடம் கேட்கிறார். நான் தமிழ் என்று சொல்கிறேன். அவர் குற்றியலுகரம் சம்பந்தமான கேள்வி ஒன்றைக்கேட்க சர்வாங்கமும் நடுங்குகிறது.
இலக்கணம் எனக்கு அவ்வளவாக வராது.
எப்படியோ விடை சரியாகச் சொல்லி விடுகிறேன்.
பாராட்டி விட்டு விருப்பமான பாடலைச் சொல்லச் சொல்கிறார். நான் திருதிருவென முழிக்கிறேன்.
வீட்டில் சினிமாப் பாடல்கள் கேட்பதில்லை. இஸ்லாமிய கீதம் கேட்கலாமா என்றுதயக்கத்தோடு கேட்க, கேளுங்கள் எங்கிறார் ஜிப்ரி அவர்கள்.
நாகூர் ஹனீபா பாடல்கள் ஒன்றுமே தலைக்கு வரவில்லை. மூளை இயக்கமற்று அப்படியே நிற்கிறேன்.
'சின்னச் சின்ன ஆசை' போன்றஒருசில பாடல்களைக் கேட்க மட்டும்வீட்டில் அனுமதியிருந்தது. 'சின்னச் சின்ன ஆசை' எங்கிறேன். அவர் சிரித்துவிட்டு'சின்ன சின்ன ஆசை இஸ்லாமிய கீதமா' என்று கேட்க எனக்கு அப்படி மண்ணுக்குள் புதைந்து போய் விடத் தோன்றுகிறது.
பின்னால் நினைக்கும் போது இனிக்கும் அந்த நினைவு.
இன்று ஏ.ஆரெம் ஜிப்ரி அவர்கள் மரணம் என்ற வாயிலைத் தாண்டிச் செல்கிறார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.
ஜவ்வாது மணம் கமழும் சுவர்க்கப் பூஞ்சோலையாக அவரது கப்றை இறைவன் மாற்றி வைக்கட்டும்.
அல்லாஹ் அவர் மீது அன்பையும் மன்னிப்பையும்சொரியட்டும்.
ஷமீலா யூசுப் அலி
2020 ,January 21

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)