ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை, இம்மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.
இந்த வழக்கு சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த வழக்கை எதிர்வரும் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக கிரிதலே இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி லுதினன் கர்னல் ஷம்மி குமாரரத்ன, டபிள்யூ.டீ உபசேன (சுரேஷ்), ஆர்.எம்.பீ.கே ராஜபக்ஷ (நாதன்), எஸ்.எம் ரவீந்திர ரூபசேன (ரஞ்சி), சமிந்த குமார அபேரத்ன கனிஷ்க குணரத்ன, அய்யாசாமி பாலசுப்ரமணியம், தரங்க பிரசாத் கமகே மற்றும் டீ.ஈ.ஆர் பீரிஸ் ஆகிய இராணுவ புலனாய்வு பிரிவின் 9 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(adaderana)