ரஷ்ய இராணுவ தளபதி பிரதமரை சந்தித்தார்

Rihmy Hakeem
By -
0
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ரஷ்ய குடியரசின் இராணுவ தளபதி ஜெனரல் ஒலோக் சல்யுகோப் நேற்று (5) ஆம் திகதி பிரதமரை பிரதமர் அலுவலக பணிமனையில் சந்தித்தார்.


இச்சந்திப்பின் போது இருவரும் தெற்காசிய பிராந்தியத்தின் சிறப்பு கவனம் மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சி தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இறுதியில் இருவரும் தங்களது நினைவுகளை நினைவூட்டும் முகமாக நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.
இராணுவ தளபதியும் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அழைப்பையேற்று ரஷ்ய இராணுவ தளபதி ஐந்து நாள் விஜயத்தை இலங்கைக்கு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)