கொரோனா வைரஸ் தாக்கம் என்ற சந்தேகம் ; 16 பேரளவில் வைத்தியசாலைகளில் அனுமதி - சுகாதார பணிப்பாளர் நாயகம்

Rihmy Hakeem
By -
0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பார்கள் என்ற சந்தேகத்தில் நாடெங்கிலும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 16 பேரளவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவிக்கையில், IDH வைத்தியசாலையில் மூவரும், கராபிடிய வைத்தியசாலையில் இருவரும், கண்டி வைத்தியசாலையில் நால்வரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நீர்கொழும்பு, ராகம, கம்பஹா, பதுளை, குருநாகல் மற்றும் யாழ்ப்பாண வைத்தியசாலைகளிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பார்கள் என்ற சந்தேகத்தில் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)