சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இருப்பினும் இந்த வைரஸை தடுப்பதற்கு இலங்கையினால் முடிந்திருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள், சமூக பாதுகாப்பு, சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவத்துள்ளார்.
தற்பொழுது இலங்கைக்கு நாளாந்தம் வரும் சின நாட்டவர் எண்ணிக்கை 30 ஆக குறைந்துள்ளது. இருப்பினும் சீன நாட்டவர் வருகையை வரையறுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு வெளிநாட்டவர் ஒருவர் வரும் போது அவர் தொடர்பிலான நோய் நிலைமையை கண்டறிவதற்கு ஜி.பி.எஸ். ஊடான முறை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்கொள்வதற்கு தற்பொழுதிலும் பார்க்க பாரிய அளவிலான திட்டம் ஒன்று வகுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் போன்ற நோய் அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்வதற்கு விசேட வைத்தியசாலை ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இவ்வாறான நோய் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக வைத்திய ஆய்வு நிறுவனம் நவீன மயப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சீன தூதுவர் மகிழ்ச்சி தெரிவத்துள்ளார். கடந்த அரசாங்க காலப்பகுதியில் மருந்து வகைகளை இறக்குமதி செய்வதற்கான பணம் செலுத்தப்படவில்லை. அவற்றையும் நாம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)