கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிற்கும் பின்லாந்தின் இலங்கை தூதுவர் Harri Kamarinen க்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற கட்டட தொகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது நாட்டின் கல்வித்துறையில் பல பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்கு உதவி வழங்குவதற்கு பின்லாந்து தூதுவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
பின்லாந்து கல்வி முறை தொடர்பில் இலங்கையில் உள்ள ஆசிரியர்கள் அனுபவங்களைப் பெருவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தல், ஆசிரியர்களுக்கும் - மாணவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல், தேசிய கல்வியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் தொழில்நுட்ப கல்வியை தொடர்வதற்கு வசதிகளை ஏற்படுத்தல் போன்ற திட்டங்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)