நாபாவல முஸ்லிம் மகா வித்தியாலய இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் DIAMOND அணி சம்பியன்.

Rihmy Hakeem
By -
0

நாபாவல முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் இல்லங்களுக்கிடையிலான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வுகள் 06.02.2020 நாபாவல அல் பெளஸியா பொது மைதானத்தில் பாடசாலையின் அதிபர் கெளரவ ஷாஜஹான் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

453 புள்ளிகள் பெற்று DIAMOND இல்லம் 2020ம் ஆண்டின் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. இரண்டாம் மூன்றாம் நிலைகளுக்கு இறுதி வரை கடும் போட்டி நிலவியது. இறுதியில் GARNET இல்லம் 392 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தினையும், 390 புள்ளிகள் பெற்ற EMERALD இல்லம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டன.

 பிராந்திய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர். 2022ம் ஆண்டு இப் பாடசாலை நூற்றாண்டு விழாவினை கொண்டாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அஜ்மல் - கஹட்டோவிட்ட)





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)