ஜோஸப் வெஸ்ட் ரிட்ஜ்வே இலங்கையில் 1896 முதல் 1903 வரை ஆளுனராகப் பணியாற்றினார். இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இவரது காலத்தில் அமைக்கப்பட்டது.
இவரது மனைவியின் ஞாபகார்த்தமாகவே கொழும்பு "லேடி ரிஜ்ட்வே வைத்தியசாலை" நிர்மாணிக்கபப்பட்டது.
இலங்கையின் 4வது பிரதமரான S W R D பண்டாரநாயக்கவின் தந்தையான சொலமன் டயஸ் பண்டாரநாயக்க ஆளுனர் ஜோஸப் வெஸ்ட் ரிட்ஜ்வே உடன் நெருங்கிய நம்பிக்கையை வென்றிருந்தார். தனது நெருக்கத்தை மேலும் உறுதி செய்வதற்காக சொலமன் டயஸ் தனது மகனுக்கு S W R D பண்டாரநாயக்க என்று பெயர் சூட்டினார்.
அதாவது Solomon West Ridgeway Dias Bandaranaike என்பதாகும். இதில் வரும் West Ridgeway என்ற பெயர் பிரித்தானிய ஆளுனரை திருப்பதிப்படுத்துவதற்காக தனது மகனுக்கு சூட்டப்பட்ட பெயராகும்.
பஸ்ஹான் நவாஸ்