கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் பேரை கொல்வதற்கு சீனா அந்நாட்டு நீதிமன்றத்தில் அனுமதி கோரியதாகவும் அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதாகவும் வெளியான தகவல்கள் பொய், வதந்தி என தெரியவந்துள்ளது. சீனாவில் யுகான் நகரத்தில் உள்ள ஒரு மீன் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது. இது வவ்வாலில் இருந்து பாம்பிற்கும், பாம்பிலிருந்து அதை சாப்பிடும் சீன மக்களுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. இதனால் சீனாவில் பலி எண்ணிக்கை 800- ஐ கடந்துள்ளது. இந்த நோய் மேலும் 20000 பேருக்கு பரவியுள்ளதும் அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுவதும் தெரிகிறது.
உறுதி இந்த நிலையில் காற்றின் மூலம் கொரோனா நோய் பரவுவதால் இதனை கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு தவித்து வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை கருணை கொலை செய்தால் பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என சீனா திட்டமிட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகின.
உறவினர்கள் மேலும் கருணைக் கொலை செய்ய அந்நாட்டு நீதிமன்றத்தில் அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவை ஏற்ற நீதிமன்றமும் கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கியது போன்று சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன. இதனால் நோய் பாதித்த மக்களும் அவர்தம் உறவினர்களும் அச்சத்தில் உள்ளனர்.
உண்மைத்தன்மை இதுகுறித்து உண்மையை விசாரித்த போது கொரோனா வைரஸ் பாதித்த மக்களை அந்நாட்டு அரசு கொல்ல எந்த திட்டமும் தீட்டவில்லை என உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வெப் மீடியா இந்த செய்தியை பரப்பியதை மேற்கோள் காட்டி ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் இந்த தவறான செய்தி பரவியுள்ளது. திட்டம் இல்லை அந்த இணைய மீடியாவை தவிர்த்து வேறு எந்த ஊடகங்களிலும் இது போன்ற செய்தி வெளியாகவில்லை. மேலும் அந்த வெப் மீடியா குறித்து ஆராய்ந்ததில் அலுவலக முகவரியோ, ஊர் பெயரோ, ஈமெயில் முகவரியோ கொடுக்காததும், அந்த இணையதளம் சீனாவின் குவான்டாங்கை அடிப்படையாக கொண்டு இயங்கினாலும் அமெரிக்காவின் வளர்ச்சி குறித்தே அதிக அளவில் செய்திகள் காணப்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே 20 ஆயிரம் பேரை சீன அரசு கொல்லும் திட்டமெல்லாம் இல்லை என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது.
(Thanks - One India)