2020 இன் முதல் 15 நாட்களில் : 142 கற்பழிப்புகள், 42 பாலியல் வன்கொடுமைகள், 54 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்வங்கள் #srilanka

Rihmy Hakeem
By -
0

2020 ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் 142 கற்பழிப்பு சம்வங்கள், 42 பாலியல் வன்கொடுமைகள் மற்றும் 54 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்வங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக நேற்று முன் தினம் பாராளுமன்றில் உரையாடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஹேஷா விதாரண எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பதிலளிக்கையில்,
- 2020 ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் 142 கற்பழிப்பு சம்வங்கள், 42 பாலியல் வன்கொடுமைகள் மற்றும் 54 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்வங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளன.
- 78 கற்பழிப்பு சம்வங்கள், 21 பாலியல் துஷ்பிரயோக சம்வங்கள் மற்றும் 34 சிறுவர் பாலியல் சம்பவங்களுக்கான விசாரணைகள் தற்போது பூர்த்தியாகியுள்ளன.
- அதிகளவான சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. 44 கற்பழிப்பு சம்பவங்கள், 8 பாலியல் வன்கொடுமைகள், 17 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் 2020 இன் முதல் 15 நாட்களில் பதிவாகியுள்ளன.
- 11,998 கற்பழிப்புகள், 4,806 பாலியல் வன்கொடுமைகள் மற்றும் 5,891 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் 2012 - 2020 காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)