கடும் வரட்சி – நீர் மின் உற்பத்தி 23.01 சதவீதமாக வீழ்ச்சி

Rihmy Hakeem
By -
0
தற்பொழுது நிலவிவரும் வரட்சியின் காரணமாக நாட்டின் மின் உற்பத்தி 38GW (Gigawatt)ஆகும். தற்பொழுது நிலவும் கடும் வரட்சியின் காரணமாக அதாவது 46 வாரங்களாக நிலவி வரும் இந்த வரட்சியினால் நீர் மூலமான மின் உற்பத்தி 23 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
நீரேந்து பகுதிகளிலும் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. நேற்றைய தினம் வரையில் நாட்டின் மொத்த மின் உற்பத்தி வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நீர் மூலமான மின் உற்பத்தி 23.01 சதவீதமாகும், டீசல் மற்றும் அணல்மின் நிலையம் ஊடான மின் உற்பத்தி 74.92 சதவீதமாகும். சூரிய சக்தி மூலமான மின் உற்பத்தி 0.84 சதவீதமாகும், காற்று மூலமான மின் உற்பத்தி 1.2 சதவீதமாகும் என்று பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின் சக்தி எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மின்சாரத்தை தடை இன்றி விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின் சக்தி எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் எந்தவித மின் தடையும் இன்றி மின்சாரத்தை வழங்குவதற்கு மின் சக்தி எரிசக்தி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)