சிசிடிவி சேதப்படுத்திய விவகாரம் ; 25 களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு 2 ஆண்டுகள் வகுப்பு தடை

Rihmy Hakeem
By -
0
களனி பல்கலைக்கழகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி ​கமெரா தொகுதியைக் கழற்றியெறிந்த சம்பவத்துடன் தொடர்புடைய, குறித்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு, இரண்டு ஆண்டுக்கால வகுப்புத்தடை விதிக்க, பல்கலைக்கழ நிர்வாகச் சபை தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் உடைக்கப்பட்டுள்ள சிசிடி​வி கமெராத் தொகுதிகளை மீண்டும் விரைவில் பொருத்துவதற்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், பல்கலைக்கழ நிர்வாகச் சபை அறிவித்துள்ளது.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)