31 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா ஆரம்பம்

Rihmy Hakeem
By -
0
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடாத்தி வருகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா நேற்று (27-02) வடமத்திய மாகாண விளையாட்டு கட்டடத் தொகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்குபற்றலுடன் ஆரம்பமாகியுள்ளது.



தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த விளையாட்டு விழா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரும் பணிப்பாளர் நாயகமும் ஆகிய சட்டத்தரணி தெஷார ஜயசிங்ஹவின் தலைமையில் நேற்று மாலை 3 மணியளவில் ஆரம்பமாகியது.

விளையாட்டு விழாவின் பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக் க்ஷ அவர்கள் கலந்துகொண்டு ஆசி கூறி விளையாட்டு விழாவை ஆரம்பித்து வைத்திருக்கிறார்

வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாகங்களையும் சேர்ந்த இளைஞர் யுவதிகள் இந்த விளையாட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

குறித்த விளையாட்டு விழாவானது எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இன்றைய விளையாட்டு விழாவில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமத்திய மாகாண ஆளுநர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உடைய உயரதிகாரிகள் இளைஞர் யுவதிகள் பொதுமக்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

இங்கே கருத்துரை வழங்கிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,

விளையாட்டு விழாக்களின் ஊடாகத்தான் தேசிய ரீதியில் சர்வதேச ரீதியில் சாதிக்க கூடிய விளையாட்டு வீரர்களை இனம் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களை சிறப்பாக பயன்படுத்துமாறும் நீங்களும் எதிர்காலத்தில் சர்வதேச மட்டங்களில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற்ற கூடிய வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.


-தவசீலன்-

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)