பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கான அங்கத்தவர்களின் பெயர்கள் நாளை

  Fayasa Fasil
By -
0
பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கான அங்கத்தவர்களின் பெயர்கள் நாளை  பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நாளை அறிவிக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து கலைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கான புதிய அங்கத்தவர்களின் பெயர்கள் அரசியல் கட்சி தலைவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு கட்சியின் சார்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்தும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு அமைவாக தெரிவுக் குழுவுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் பணி சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தெரிவுக் குழுவிற்கு அங்கத்தவர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் தெரிவுக்குழு கூடவுள்ளது. தெரிவுக் குழுக்களுக்கான தலைவர்கள் இந்த கூட்டத்தின் பின்னர் நியமிக்கப்படுவார்கள்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)