2020 ஆம் ஆண்டுக்கான இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் இன்று (22) நாடெங்கிலும் நடைபெற்று வருகிறது. இது இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தலில் 18 இற்கும் 27 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர், யுவதிகள் போட்டியிடுகின்றனர். அத்துடன், தேர்தலானது பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கு சென்ற 20 ஆம் திகதி வரை ஒன்லைன் மூலம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. அதில் பதிவு செய்ய முடியாமல் போன சிலர் நீர்கொழும்பு பிரதேச செயலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.