எம்சிசி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
தேசிய பாதுகாப்புக்கும், மக்களின் எதிர்ப்பார்ப்புக்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துவதாக ஒப்பந்தம் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு சுட்டிக்காட்டியிருந்தது. இது தொடர்பான அறிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.
வெளிப்படைத் தன்மை இல்லாமை, அரசியல் யாப்புக்கு முரணான விடயங்கள் என்பன இதில் அடங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பினவருமாறு:
வெளிப்படைத் தன்மை இல்லாமை, அரசியல் யாப்புக்கு முரணான விடயங்கள் என்பன இதில் அடங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பினவருமாறு:
24. மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (MCC) பொருத்தமான அபிவிருத்தி உடன்படிக்கையை மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட கழிவின் இடைக்கால அறிக்கை.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபன திட்டம் தொடர்பில் மதிப்பீடு செய்யப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு சிபாரிசுகளை வழங்குவதற்காக பேராசிரியர் லலித்த ஸ்ரீ குணருவான் அவர்களின் தலைமையில் மதிப்பீட்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் அவர்களிடம் இடைக்கால அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் மூலதன வள பற்றாக்குறை மற்றும் கடன் சுமையினால் இலங்கையின் அடிப்படைப் பொருளாதார பாதுகாப்பற்ற முதலீட்டுக்கு தேவையான நிதி வளம் நாட்டின் வெளிநாட்டு கடன் சுமையை அதிகரிக்காமல் விநியோகிக்கக்கூடிய MCC ஆலோசனைக்குள் உள்ளடங்கியிருந்த போதிலும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் உத்தேச சில திட்டங்களுக்குள் இலங்கை தேசிய, சமூக மற்றும் பொருளாதார நலன்களுக்கு தவறான அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடிய சில பிரிவுகள் இடம்பெற்றிருப்பதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதே போன்று உத்தேச உடன்படிக்கை மற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் திட்டத்தைப் போன்று நிலை நிறுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் ஆக்க யாப்பு திருத்த சட்டத்தில் இலங்கை அரசாங்கம் யாப்புக்கும் நாட்டின் சட்ட விதிகளுக்கும் அமைவாக அல்லாத வகையில் இடம்பெறக்கூடிய சரத்து மற்றும் மானியத்தைப் போன்று தேசிய நிதியத்துக்கும் இறையாண்மைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் பாதகமான அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஏனைய நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் இவ்வாறான பாதகமான அம்சங்களுக்கு பொருத்தமான தவறுகளைத் திருத்துதல் மற்றும் பொருத்தமான திருத்தங்களை மேற்கொள்ளுதல் அத்தியாவசியமாவதுடன் இதன் பின்னர் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் மற்றும் திட்ட ஆலோசனை குறித்து பொது மக்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது அவசியம் மற்றும் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்வது பொருத்தமானது என்பதும் குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயங்களை உள்ளடக்கிய குழுவின் இடைக்கால அறிக்கையை அமைச்சரவை அறிந்து கொள்வதற்காக கௌரவ பிரதமர் அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் அமைச்சரவையினால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆரம்ப தீர்மானங்கள் மற்றும் சிபாரிசுகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

