கொழும்பு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடற்படை பங்களிப்பு

Rihmy Hakeem
By -
0
கொழும்பு நகரின் நகராட்சி எல்லைக்குள் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


வாகனங்களை கையாளுவதற்காக படையினர் இணைக்கப்பட்டதுக்கு இணையாக கொழும்பு நகரத்தில் வேகமாக அதிகரித்து வரும் வாகன நெருக்கடிகளை குறைப்பதற்கு மற்றும் இலங்கை பொலிஸாருக்கு உதவும் நோக்கத்துடன் கடந்த 25 ஆம் திகதி முதல் கடற்படை பொலிஸார் மோதர பொலிஸாருடன் இனைந்து கடமைகளில் ஈடுபட தீர்மானம் எடுத்துள்ளது.

இந்த முன்முயற்சியின் மூலம் கொழும்பு நகராட்சி எல்லைக்குள் போக்குவரத்து கட்டுப்பாட்டு கடமைகளை திறமையாக நிறைவேற்றுவதற்கும் அதனூடாக காற்று மாசுபாடு மற்றும் மனித நேரம் வீணாக்குவதை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

AdaDerana 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)