ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எதிரணியை குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழக்க செய்த சாதனையை நேபாள கிரிக்கெட் அணி இன்று (12) சமன் செய்தது.
இன்று நேபாளத்தின் கீர்த்திபூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அமெரிக்க அணியை 12 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் வீழ்த்தியது நேபாள அணி.
இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு இலங்கை அணி சிம்பாப்வே அணியை 18 ஓவரில் 35 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தமை இதுவரை உலக சாதனையாக இருந்ததுடன், அதனை இன்று நேபாள அணி சமன் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.