தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சின் www.statemediaministry.gov.lk என்ற இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த புதிய இணையத்தளம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சுணந்த மத்தும பண்டார உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)