குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக மூன்று லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 26ஆம் 27ஆம், 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. தெரிவு செய்யப்படுபவர்கள் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்த அலுவலகங்களில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

