எல்லோருக்கும் ஒரே சட்டம் வேண்டும் ; ஒருவர் மரத்தில் ஏறி உண்ணாவிரதம்

Rihmy Hakeem
By -
0
பேருவளை கடற்கரை மைதானத்துக்கு அருகிலுள்ள மரம் ஒன்றின் மீதேறி, நபரொருவர் இன்று (04) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நாட்டில்  யாவருக்கும் பொதுவான ஒரே சட்டம் அமுல்படுத்தப்பட  வேண்டுமெனத் தெரிவித்து, பதாகைகளைக் காட்சிப்படுத்தியவாறு, குறித்த நபர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
காலவில பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், பொலிஸார் சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தவில்லை எனவும் இதனால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த இடத்துக்குச் ​சென்று  களுத்துறை உதவி பொலிஸ் அதிகாரி நிஷாந்த சில்வா, குறித்த நபரை மரத்திலிருந்து கீழே இறங்குமாறு பல தடவை எடுத்துரைத்தும் அவர் கீழே இறங்க மறுத்துள்ளார்.
குறித்த நபர் இன்று (04) காலை 8.00 மணி தொடக்கம்  இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)