கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் நடைபெற்ற சுதந்திர தினத்தின் இஸ்லாம் சமய நிகழ்வுகள்

Rihmy Hakeem
By -
0
72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட இஸ்லாம் சமய நிகழ்வுகளின் பிரதான வைபவம் இன்று காலை கொள்ளுப்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாலில் நடைபெற்றது. 
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் அஷ்செய்க் ஏ.பி.எம். அஷ்ரப் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் கலந்துகொண்டார். 
பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி இதன்போது வாசித்தார். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், சியனே ஊடக வட்டத்தின் தலைவருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
இங்கு உரையாற்றிய வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் பெரும்பான்மை மக்களுடன் முஸ்லிகள் ஒண்றிணைந்து வாழ வேண்டும். அப்போதுதான் சுதந்திரத்தின் உண்ணதத்தன்மையை அடையலாம் என்றும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)