புத்த சாசன, கலாச்சார மற்றும் சமய விவகார அமைச்சு மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட அஸ்ஸெய்யித் ஹஸன் மௌலானா அவர்கள் நேற்றைய தினம் (18) முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தில் வைத்து கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் கும்புருகமுவே வஜிர தேரர், ஹஜ் குழு உறுப்பினர் அஸ்ஸெய்யித் நகீப் மௌலானா உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

