ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் விஷேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றைய தினம் (18) அலரி மாளிகையில் நடைபெற்றது.
முன்னாள் ஜனாதிபதியும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். மேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
இதன்போது பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையை குழு ஒன்றின் ஊடாக முன்னெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கூட்டணி சார்பில் போட்டியிடும் கட்சிகள் தனித்து போட்டியிடுவதாகவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.