இலங்கையில் 10வது கொரோனா தொற்றாளரும் இனங்காணப்பட்டார்

Rihmy Hakeem
By -
0

ஒன்பதாவது மற்றும் பத்தாவது கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த இருவரும் பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் 56 வயதுடைய பெண்ணும் மற்றும் 17 வயதுடைய யுவதி ஒருவருமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இத்தாலியில் இருந்து கடந்த 07 ஆம் திகதி இலங்கை வந்த 56 வயதுடைய பெண் ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

17 வயதுடைய யுவதி ஏற்கனவே கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்ட நோயாளி ஒருவரின் உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.

(அததெரண)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)