கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்களை தனிமைப்படுத்துவதற்கு தற்போதைக்கு 12 நிலையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
பொம்பெமடு, புனானே, கந்தகாடு, பனிச்சன்கர்னி, மையங்குளம் பகுதிகளிலுள்ள தேசிய பாதுகாப்பு நிலையங்கள் மற்றும் பொரவெவ, கல்கந்த, கஹகொல்ல, தியதலாவ இராணுவ வைத்தியசாலை மற்றும் தியதலாவ கெமுணு முகாம் ஆகியவற்றில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் சகல வசதிகளுடன் கூடிய இரு நிலையங்கள் தம்மின்ன மற்றும் ரன்டம்பே ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 1723 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளை சேர்ந்த 8 பேரும் அங்கிருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

