கஹட்டோவிட்ட பத்ரியா 2014 O/L Batch இன் முயற்சியால் 2,300 முகக்கவசங்கள் இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டன

Rihmy Hakeem
By -
0
கஹட்டோவிட்ட அல் பத்றியா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற O/L 2014 வகுப்பினரின் முயற்சியில் தயாரிக்கப்பட்ட முகமூடிகளை (mask) விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று காலையில் கஹட்டோவிட்ட பிரதான சந்தி மற்றும் கஹட்டோவிட்ட அல் பத்றியா மகா வித்தியாலய பாடசாலை முன்பாகவும் ஓகடபொல பகுதியிலும் இந்த மாஸ்க் விநியோகப்பணிகள் சிறப்பாக இடம்பெற்றன.

காலத்தின் தேவையுணர்ந்து செய்யப்பட்ட இந்த நன்மையான காரியத்தை இலவசமாக மக்களின் சுகாதார ஆரோக்கிய பாதுகாப்பு கருதி மக்களுக்கு வழங்க முன்வந்தமை சிறப்பம்சமாகும்.

சுமார் 2300 இற்கும் மேற்பட்ட மாஸ்க்களை இந்த வகுப்பு மாணவர்களால் தயாரித்து ஊர்மக்களுக்கும் கஹட்டோவிட்ட பிரதான பாதையில் செல்லும் முஸ்லிம் அல்லாத பெரும்பான்மை சமூகத்தினருக்கும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

முதலாவது படத்தில் கஹட்டோவிட்ட அல் பத்றியா மகா வித்தியாலய அதிபர் ஜனாப் அஸாம் அவர்களுக்கு முகமூடியை அணிவிப்பதையும் ஏனையோர்களுக்கு பல்வேறு இடங்களில் விநியோகம் செய்வதையும்படங்களில் காணலாம்.

இந்த முக்கிய தருணத்தில் தேவையுணர்ந்து இலவசமாக இந்த புண்ணிய பணியை செய்த O/L 2014 வகுப்பினரின் செயலை ஊரில் பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

நன்றி - Kahatowita News Page Official








கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)