டி20 தொரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள் அணி

Rihmy Hakeem
By -
0

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டி20 போட்டியில் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று 2 - 0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிந்தெடுத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பாக தசுன் சானக 31 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 23 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் ஃபேபியன் ஹெலன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு 156 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 15 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் சிம்ரோன் ஹெட்மெயர் 43 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

என்ரூ ரசல் ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ஏஞ்சலோ மெத்தீவ்ஸ் மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் பெற்றுக் கொண்டனர்.


adaderana.lk

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)