பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் செய்த 22 மாணவர்கள் விளக்கமறியலில்

Rihmy Hakeem
By -
0
 இன்று (01) பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் சத்தியகிரகத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட தேரர்கள் இருவர் உட்பட 22 மாணவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறி செயற்பட்ட காரணத்தினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருகுணு பல்கலைகழக உபவேந்தரை நீக்குமாறு கோரி கடந்த வியாழக்கிழமை முதல் இந்த சத்தியாக்கிரக போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)